கரோனா பரவல் எதிரொலி: மீண்டும் தள்ளிப்போன டாம் க்ரூஸ் படங்கள்

By செய்திப்பிரிவு

கரோனா பரவலால் டாம் க்ரூஸ் நடித்துள்ள ‘டாப் கன்’, ‘மிஷன் இம்பாஸிபிள்’ உள்ளிட்ட படங்கள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

டாம் க்ரூஸ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் 'டாப் கன்'. இன்று வரை இது ஒரு கிளாஸிக் படமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 34 வருடங்களுடக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவிருந்தது.

ஆனால் கரோனா அச்சுறுத்தலால் படம் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிப் போனது. கரோனா தொற்று குறையாததால் மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஆண்டும் டாம் க்ரூஸ் திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 'டாப் கன்' இரண்டாம் பாகத்தின் வெளியீடு இந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பாராமவுண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதே போல டாம் க்ரூஸ் நடிக்கும் ‘மிஷன் இம்பாஸிபில் 7’ படம் 2022ஆம் ஆண்டு மே மாதமும், ‘மிஷன் இம்பாஸிபிள் 8’ 2023ஆம் ஆண்டு ஜூலை மாதமும் தள்ளிவைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE