இயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று-  தனியார் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

இயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் புதிதாக 1,45,384 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 794 பேர் பேர் பலியாகியுள்ளனர்.

திரைப்பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கார்த்திக் ஆர்யன், ஆமிர் கான், கோவிந்தா, பூமி பெட்னேகர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் சுந்தர்.சி-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

நேற்று (10.04.201) மாலை எனது கணவர் சுந்தர்.சிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நன்றாக இருக்கிறார். ஆனாலும் முன்னெச்செரிக்கையான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உடனடியாக பரிசோதனை செய்து பார்க்கவும். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குஷ்புவை ஆதரித்து அவரது கணவர் சுந்தர்.சி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE