மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நேற்று (ஏப். 9) ‘கர்ணன்’ படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ‘கர்ணன்’ படத்தைப் பாராட்டியுள்ளனர்.
விஜய் சேதுபதி: கர்ணன் அற்புதமான படம்... தவறவிட வேண்டாம்.
தயாரிப்பாளர் தனஞ்செயன்: ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிய மிகச் சிறந்த, நம்பகமான காட்சிப்படுத்தல் 'கர்ணன்'. மாரி செல்வராஜின் சிறப்பான இயக்கம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியுள்ளது. இப்படத்தை மிக உயரத்துக்கு எடுத்துச் சென்ற தனுஷுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
அர்ச்சனா கல்பாத்தி: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தைப் பற்றிப் பேச எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த அற்புதமான படத்தைத் திரைக்குக் கொண்டு வந்த தாணுவுக்கு நன்றி.
பி.சி.ஸ்ரீராம்: ஹைதரபாத்திலிருந்து கர்ணனின் சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது. என் மனதில் வலியை உணரச் செய்த உங்களின் முதல் படம் இது. அடுத்த உண்மை என் மீது படரக் காத்திருக்கிறேன். அடுத்த உண்மைக்காகக் காத்திருப்பது மிகுந்த தொந்தரவு செய்யக்கூடியதாக இருக்கிறது.
ஆதவ் கண்ணதாசன்: 'கர்ணன்' சக்திவாய்ந்த மற்றும் முகத்தில் அறையும் திரைப்படம். தனது ஒவ்வொரு படத்திலும் தனுஷ் முத்திரை பதிக்கிறார். மாரி செல்வராஜ் அண்ணனுக்கு சல்யூட். படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீள இயலவில்லை. 'கர்ணன்' கொண்டாடப்படவேண்டிய படம்.
இயக்குநர் அஸ்வின் சரவணன்: 'கர்ணன்' ஏற்படுத்திய தாக்கம் குறையும் வரை பதிவிட்டுக் கொண்டே இருப்பேன். அதற்கு சிறிது காலம் ஆகும். தற்போது நாட்டின் தீர்மானமான குரல்களில் ஒன்றாக மாரி செல்வராஜ் மாறிக் கொண்டிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago