சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் நடிக்கவுள்ள படத்துக்கு 'ஏஜெண்ட்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'கிக்', 'ரேஸ் குர்ரம்', 'கிக் 2', 'துருவா', 'சைரா' உள்ளிட்ட பல வரவேற்புப் பெற்ற படங்களை இயக்கியவர் சுரேந்தர் ரெட்டி. சிரஞ்சீவி நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரான 'சைரா' படத்தை இயக்கியவர் சுரேந்தர் ரெட்டி. அந்தப் படத்துக்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார்.
அந்தக் கதையில் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். கதைக்காக தனது உடலமைப்பினை முழுமையாக மாற்றிவந்தார் அகில். தற்போது அந்தப் படத்துக்கு 'ஏஜெண்ட்' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
இன்று (ஏப்ரல் 8) படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24-ம் தேதி 'ஏஜெண்ட்' வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்காக அகிலின் உழைப்புக் குறித்து இயக்குநர் சுரேந்தர் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அகிலின் இந்த அசாத்தியமான உடல் எடை மாற்றம் 7 மாதங்களுக்கு முன் தொடங்கியது. அவர் நினைத்தபடி உடலைக் கொண்டு வர அவர் ஒவ்வொரு நாளும் காட்டிய அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும் பார்த்து நான் வாயடைத்துப் போனேன். ஏஜெண்ட் திரைப்படத்தின் மூலம் நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு அகிலை நான் காட்டுவேன் என்று உறுதியாகக் கூறுகிறேன்"
இவ்வாறு சுரேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago