திருமணமா?- ராய் லட்சுமியின் கிண்டல் பதிவு

By செய்திப்பிரிவு

தனது திருமணம் குறித்துப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், அஜித், லாரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

31 வயதாகும் ராய் லட்சுமியின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளியாகும். அதற்கு அவரும் மறுப்பு தெரிவித்து வந்தார். சமீபமாக உடல் எடையை மிகவும் குறைத்து, தனது சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது திருமணம் குறித்துக் கிண்டலாகப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நீண்ட நாட்களாகப் பல பேர் இதுகுறித்துக் கேட்டு வருவதால் இதைப் பற்றிப் பேச முடிவெடுத்திருக்கிறேன்.

முதலில், நான் எனது உறவு நிலை என்னவென்பதை மறைக்கவில்லை. மேலும் அது அடுத்தவருக்குத் தேவையில்லாத விஷயமும் கூட. அடுத்து, எனக்கென ஒரு தனியுரிமை உள்ளது. எனது துணையின் நலனையும் நான் பாதுகாக்க வேண்டும்.

ஆம், ஏப்ரல் 27, 2021 அன்று எங்களுக்குத் திருமண நிச்சயம் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்களை நெருங்கிய நண்பர்களுக்குக் கடந்த வாரம் கொடுத்திருக்கிறோம்.

இது எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம்தான். ஆனால், என் குடும்பத்தினர் இதனால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதனால் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது துணையுடன் வாழக் காத்திருக்கிறேன்.

அடிக்கடி உங்கள் கைகளைக் கழுவி, தேவைப்படும்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தவே இந்தப் பதிவை நான் வேறொருவரிடமிருந்து திருடிப் பதிவிட்டிருக்கிறேன்".

இவ்வாறு ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்