நாயகனாக நடிக்கும் சதீஷ்: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பு

By செய்திப்பிரிவு

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சதீஷ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். 'மதராசபட்டினம்', 'எதிர் நீச்சல்', 'மான் கராத்தே', 'கத்தி', 'ஆம்பள', 'தேவி', 'ரெமோ', 'கலகலப்பு 2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மறைந்த கிரேசி மோகனின் நாடகக் குழுவில் இருந்த சதீஷ், சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பராவார்.

தற்போது சதீஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இவர் பல்வேறு யூடியூப் வீடியோக்களைத் தயாரித்து, இயக்கியுள்ளார். அவருடைய இயக்கத்தில் முதல் படமாக இது உருவாகவுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறுகிறது. நாயகியாக பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் பூஜையில் ஏஜிஎஸ் நிறுவனக் குழுவினருடன் படக்குழுவினரும் பங்கேற்றார்கள். மேலும், சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்