ஆண்டனி பாக்கியராஜ் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.
அஜித் நடித்த 'விஸ்வாசம்', விஷால் நடித்த 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' உள்ளிட்ட படங்களின் கதைகளில் பணிபுரிந்தவர் ஆண்டனி பாக்கியராஜ். இயக்குநர் மித்ரனுக்கு நெருங்கிய நண்பர். சில படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்டனி பாக்கியராஜ்.
தற்போது ஆண்டனி பாக்கியராஜ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இவர் கூறிய கதை ஜெயம் ரவிக்கு மிகவும் பிடித்துவிடவே, உடனே ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை 'அடங்கமறு' மற்றும் 'பூமி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் ஆண்டனி பாக்கியராஜ். அதனைத் தொடர்ந்து இதர நடிகர்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 29-வது படமாகும்.
» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபாஸ்?
» கரோனா தொற்று அதிகரிப்பு: 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைப்பு
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அதனைத் தொடர்ந்து கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். அதற்குப் பிறகே ஆண்டனி பாக்கியராஜ் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஜெயம் ரவி.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago