மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆமிர்கான், மாதவன், சஞ்சய் லீலா பன்சாலி, ஆலியா பட், அக்ஷய் குமார், கோவிந்தா உள்ளிட்ட பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை பூமி பெட்னேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
» இர்ஃபான் கானைப் போல நடிக்க வேண்டும் - ராஜ்குமார் ராவ் நெகிழ்ச்சி
» கர்நாடக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி - ஏப். 7 முதல் அமலாகிறது
இன்று எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைகளையும் பின்பற்றி வருகிறேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சூழலில் எளிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தும் எனக்கு தொற்று ஏற்பட்டு விட்டது. தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். கைகளை கழுவி, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.
இவ்வாறு பூமி பெட்னேகர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago