இர்ஃபான் கானைப் போல நடிக்க வேண்டும் - ராஜ்குமார் ராவ் நெகிழ்ச்சி

By ஐஏஎன்எஸ்

‘தி லன்ச்பாக்ஸ்’, ‘மக்பூல்’, ‘தி நேம்ஸேக்’, ‘இந்தி மீடியம்’ உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றவர் இர்ஃபான் கான். ஒரு வருடமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு பிரிட்டனில் சிகிச்சை நடந்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இர்ஃபான் இந்தியா திரும்பினார். மார்ச் மாதம் இர்ஃபான் நடிப்பில் கடைசிப் படமான ‘அங்க்ரேஸி மீடியம்’ வெளியானது. ஏப்ரல் 29, 2020 அன்று தனது 53 வயதில், சிகிச்சை பலனின்றி இர்ஃபான் காலமானார்.

இந்நிலையில் நடிகர் இர்ஃபான் கான் குறித்து நடிகர் ராஜ்குமார் ராவ் நினைவு கூர்ந்துள்ளார். ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இர்ஃபான் கானின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் நடித்த படங்களாகட்டும், அவருடைய கதாபாத்திரங்களாகட்டும், அது போன்ற ஒரு சாதனையைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். அது தான் சிறப்பான ஒரு விஷயம்.

ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலையில் நான் இல்லை. அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தும் அளவுக்கு விசேஷமான எதையும் நான் செய்துவிடவில்லை. என்னை விட சிறந்த நடிகர்கள் பலரும் வெளியே இருக்கிறார்கள்.

இவ்வாறு ராஜ்குமார் ராவ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்