கர்நாடக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி - ஏப். 7 முதல் அமலாகிறது

By செய்திப்பிரிவு

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.25 கோடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் நோய் பரவல் அதிகரித்து வருவதால் அம்மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு விடுதிகள், தியேட்டர்கள் மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதி கரோனா பரவல் அதிகமுள்ள ஏழு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2 முதல் அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கர்நாடக மாநில தலைமைச் செயலர் பி.ரவிகுமார் உத்தவிட்டிருந்தார். ஆனால் ஏராளமான ரசிகர்கள் பல திரையரங்குகளில் ஏற்கெனவே டிக்கெட் புக் செய்திருந்ததால் தற்போது இந்த உத்தரவை வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்