'மாநகரம்' இந்தி ரீமேக்கான 'மும்பைகர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

'மாநகரம்' படத்தின் இந்தி ரீமேக்கான 'மும்பைகர்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாநகரம்'. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியில் இதன் ரீமேக் தயாராகி வருகிறது.

'மும்பைகர்' என்ற பெயரில் உருவாகும் ரீமேக்கை இயக்கியுள்ளார் சந்தோஷ் சிவன். ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடிக்கும் முதல் நேரடி இந்திப் படமாக 'மும்பைகர்' தயாராகி வருகிறது.

இன்று (ஏப்ரல் 3) நாயகன் விக்ராந்த் மாசேவின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு 'மும்பைகர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், இசையமைப்பாளராக பிரசாந்த் பிள்ளையும் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE