விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை லலித் குமார் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
'மாஸ்டர்' படம்தான் கரோனா அச்சுறுத்தலுக்குப் பின் மக்களைத் திரையரங்குகளுக்கு வரவைத்த படம் என்று பல்வேறு முன்னணித் திரையுலக பிரபலங்கள் இப்போதும் கூறிவருகிறார்கள். அந்த அளவுக்கு 'மாஸ்டர்' படத்தின் வெற்றி இருக்கிறது. மேலும், தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 'மாஸ்டர்' முதலிடத்தில் உள்ளது.
தற்போது இந்தி டப்பிங் வெளியாகிவிட்டாலும், இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வருகிறார்கள். இதனால் 'மாஸ்டர்' படத்தின் உரிமைகளை வைத்திருக்கும் லலித் குமார் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.
» கெளரி கிஷனுக்கு கரோனா தொற்று உறுதி
» சக நடிகைகள் ஏன் என்னை ஆதரிக்கவோ வாழ்த்தவோ இல்லை? - கங்கணா கேள்வி
விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது 'மாஸ்டர்' படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago