தனது மனைவி கிரோன் கேருக்கு மையெலோமா என்கிற ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் நடிகர் அனுபம் கேர் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுபம் கேர். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள இவர் சிறந்த உறுதுணை நடிகர் என்று பெயர் பெற்றவர். 1985ஆம் ஆண்டு நடிகை கிரோன் கேரைத் திருமணம் செய்து கொண்டார்.
கிரோன் கேரும் பாலிவுட்டிலும், சின்னத்திரையிலும் மிகப் பிரபலமான நடிகை. 'ரங்க் தே பசந்தி', 'ஃபனா', 'ஓம் ஷாந்தி ஓம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவரது முதல் திருமணத்தில் சிகந்தர் என்றொரு மகன் இவருக்கு உண்டு.
அனுபம் கேர், கிரோன் கேர் இருவருமே பாஜக கட்சியில் தீவிரமாக இயங்கி வருபவர்கள். சண்டிகரிலிருந்து எம்.பி.யாகத் தேர்வானவர் கிரோன் கேர். நீண்ட நாட்களாகவே கிரோன் கேர் பணியில் காணப்படவில்லை.
இதுகுறித்து சண்டிகர் நகரின் பாஜக தலைவர் அருண் சூட், கிரோன் கேருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். தற்போது இதுகுறித்து அனுபம் கேர் உறுதி செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago