நடன இயக்குநர்கள் குறித்த விமர்சனம்: சாந்தனு பதிலடி

By செய்திப்பிரிவு

நடன இயக்குநர்கள் குறித்த விமர்சனத்துக்குத் தனது ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார் சாந்தனு.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'தளபதி 65' என்று அழைத்து வருகிறது படக்குழு. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளதாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ட்வீட் செய்திருந்தார். சில மணித்துளிகளில் இந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனாலும், இந்த ட்வீட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து விஜய் ரசிகர்கள் பரப்பினார்கள்.

அப்போது இணையவாசி ஒருவர் ஜானி மாஸ்டரின் ட்வீட்டைப் பகிர்ந்து, "அருமை. ஷோபி மாஸ்டர், தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், ஷெரீஃப் மாஸ்டர், ராஜுசுந்தரம் மாஸ்டர் ஆகியோரால் போரடிக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ராஜு மாஸ்டர், ஷோபி மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், தினேஷ் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர், ஷெரீஃப் மாஸ்டர் உள்ளிட்ட பலரது நடன இயக்கத்தைத்தான் இவ்வளவு வருடங்களாக நாம் ரசித்து வந்திருக்கிறோம். எனவே, எப்போதும் இப்படிப் பேசாதீர்கள். ஜானி மாஸ்டர் மிகச் சிறந்த திறமைசாலிதான். அவரையும் ஊக்குவிப்போம். ஆனால், அதற்காக மற்றவர்களைத் தரக்குறைவாகப் பேச வேண்டாம்".

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்