டிசி காமிக்ஸின் ‘ப்ளாக் ஆடம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
48 வயதான நடிகர் ட்வைன் ஜான்ஸன் முன்னாள் பொழுதுபோக்கு மல்யுத்த வீரர். அதில் கிடைத்த புகழின் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான 'ப்ளாக் ஆடம்' பெயரில் உருவாகும் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் அட்லாண்டா, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிசி நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில் இப்படம் 2022ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நடிகர் ட்வைன் ஜான்ஸன் அறிவித்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் உறுதி செய்துள்ளார்.
» டெல்லி மது விடுதியில் சண்டை போட்டது நானா? - அஜய் தேவ்கன் விளக்கம்
» இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கரோனா; தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
‘ஆர்ஃபன்’, ‘ஹவுஸ் ஆஃப் வேக்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜாம் காலெட் செர்ரா இப்படத்தை இயக்கி வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago