நடிகர் பிரபாஸ் ரூ.6 கோடி மதிப்பிலான லம்போர்கினி அவெண்டடார் என்கிற ஆடம்பர காரை வாங்கியிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த நடிகர் பிரபாஸ். அடுத்து அவர் நடித்த 'சாஹோ' திரைப்படமும் பெரிய வெற்றி பெற்றது. தற்போது 'ஆதிபுருஷ்', 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
கார்கள் வாங்குவதில் ஆர்வமுள்ள பிரபாஸ் ஏற்கெனவே ஜாக்குவார், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட ஆடம்பர கார்களை வைத்திருப்பதாகத் தெரிகிறது. தற்போது அந்த வரிசையில் லம்போர்கினி நிறுவனத்தின் அவெண்டடார் காரை வாங்கியிருக்கிறார். இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் வரை மதிப்புடைய இந்த காரை சரியாகத் தனது தந்தையின் பிறந்த நாளன்று பிரபாஸ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கார் பிரபாஸ் வீட்டில் நிற்பது, உடன அவர் சகோதரர் இருப்பது, சாலையில் இதை பிரபாஸ் ஓட்டிச் செல்வது உள்ளிட்ட புகைப்படங்களும், காணொலிகளும் பிரபாஸ் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளன. ஹைதராபாத்தில் இருக்கும் பிரபாஸின் சொத்து மதிப்பே ரூ.60 கோடி என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago