ரஹ்மானுடன் பணியாற்றியதே எனக்கு ஒரு சாதனைதான்: எஸ்.ஜே.சூர்யா

By செய்திப்பிரிவு

ரஹ்மானுடன் பணியாற்றியதையே ஒரு சாதனையாகத்தான் நினைக்கிறேன் என்று எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘99 ஸாங்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முன்னணி இசையமைப்பாளர்கள் யுவன், அனிருத், ஜி.வி.பிரகாஷ், முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, முன்னணி இயக்குநர்கள் ஷங்கர், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:

''ரஹ்மான் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருப்பதே அனைவருக்கும் ஒரு பாக்கியம். சினிமாவில் என்ன சாதித்தோம் என்று யோசித்தால் அவருடன் பணியாற்றியதையே ஒரு சாதனையாகத்தான் நான் நினைக்கிறேன். அவரோடு பணிபுரியும்போது பல விஷயங்களை நமக்குச் சொல்லாமலே சொல்லித் தருவார்.

அவருடைய நடத்தையே நம்மைக் கட்டுப்படுத்தும். அவர் கூறும் ஒரு வார்த்தையே பல அர்த்தங்கள் கொண்டதாக இருக்கும். மிகவும் தூய மனம் கொண்டவர். உயர்வான ஆத்மா. அதனால் அவரது படைப்புகளும் சிறப்பாக வருகின்றன. அவருடைய இசையைப் போலவே இந்தப் படமும் உலகமெங்கும் செல்லும் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்