'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழ் ரீமேக்கில் சுராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க ராகுல் ரவீந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்கச் சிந்தனையால் பாதிக்கப்படும் ஒரு படித்த பெண்ணின் நிலையை அழுத்தமாக, யதார்த்தமாகக் காட்டியிருந்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்து வருகிறார். இதில் நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
சுராஜ் வெஞ்சரமூட் கதாபாத்திரத்தில் யார் என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக சுராஜ் கதாபாத்திரத்தில் ராகுல் ரவீந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'யு-டர்ன்' படத்தின் தமிழ் - தெலுங்கு ரீமேக்கிற்குப் பிறகு, அவர் ஒப்பந்தமாகியுள்ள படமாக 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக் அமைந்துள்ளது. இதுவும் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
» ‘எம்ஜிஆராக நடிக்க கஷ்டப்படவில்லை; ரசித்துச் செய்தேன்’ - அரவிந்த்சாமி பேச்சு
» ‘தாம் தூம்’ முதல் ‘தலைவி’ வரை - சர்ச்சைகளுக்கு மத்தியில் சாதனை படைத்த கங்கணா
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம், வசனகர்த்தவாக சவரிமுத்து மற்றும் ஜீவிதா சுரேஷ்குமார், எடிட்டராக லியோ ஜான் பால், கலை இயக்குநராக ராஜ்குமார் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago