கங்கணா பிறந்த நாளன்று 'தலைவி' ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

கங்கணா ரணாவத் பிறந்த நாளன்று 'தலைவி' படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் 'தலைவி' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுவரை படத்தின் சிறுடீஸர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

பாடல்கள், ட்ரெய்லர் என எதுவுமே இதுவரை வெளியாகவில்லை. தற்போது கங்கணா ரணாவத் பிறந்த நாளன்று 'தலைவி' படத்தின் ட்ரெய்லரை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. மார்ச் 23-ம் தேதி கங்கணா ரணாவத் பிறந்த நாளாகும். அன்றைய தினம் ட்ரெய்லரை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்