'பிளான் பண்ணி பண்ணனும்' திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் வலம் வந்தவர் ரியோ ராஜ். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பால சரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.
கரோனா அச்சுறுத்தலால் சுமார் ஓராண்டாக இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது. தற்போது இந்தப் படம் ஏப்ரலில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதர படங்களின் வெளியீட்டுத் தேதியை முன்வைத்து, இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யவுள்ளது படக்குழு.
தற்போது 'பிளான் பண்ணி பண்ணனும்' தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் அடுத்த படத்தையும் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளார். கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago