மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் புதிய படம் தயாராகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்துள்ளது. தற்போது தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது 'மாஸ்டர்'தான். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை உலகம் முழுவதும் லலித் குமார் வெளியிட்டு இருந்தார்.
தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. கமல் நடிப்பில் உருவாகும் 'விக்ரம்' படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்துக்குப் பின் விஜய் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதனைத் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இது தொடர்பாக விசாரித்தபோது, " ’மாஸ்டர்’ வெளியாவதற்கு முன்பே, மீண்டும் ஒரு படம் இணைந்து பண்ணலாம் என்று விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி முடிவு செய்தது. ஆனால், அதற்கு முன்பே 'விக்ரம்' படத்தை இயக்க ஒப்பந்தமாகிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
» முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராகும் தேவி ஸ்ரீ பிரசாத்
» கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்: தனித்துவம்மிக்க ட்ரெண்ட் செட்டர் இயக்குநர்
இப்போது 'தளபதி 66' படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், 'விக்ரம்' படத்தை முடித்துவிட்டுத்தான் விஜய் படத்தை லோகேஷ் கனகராஜால் இயக்க முடியும். ஆகவே, 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடக்கம், முடிவு, வெளியீடு உள்ளிட்ட விஷயங்கள் அனைத்துமே முடிவானவுடன்தான் விஜய் படத்தை இயக்குவது எப்போது என முடிவாகும்.
ஒருவேளை 'விக்ரம்' தாமதமானால் 'தளபதி 66' படத்தை விட்டுவிட்டு 'தளபதி 67' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார். இருவரும் இணைவது மட்டும் உறுதியாகிவிட்டது" என்று தெரிவித்தார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
55 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago