கரோனா நெகட்டிவ்; கடும் காய்ச்சல்: இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று இல்லை என்றாலும், கடும் காய்ச்சலால் இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பழநியில் தொடங்கியது. பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இதனிடையே, இயக்குநர் ஹரிக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவருடன் பணிபுரிந்து வந்தவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் படக்குழுவினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இயக்குநர் ஹரிக்கு கரோனா நெகட்டிவ் என்றாலும், கடும் காய்ச்சலால் பழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தத் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்