அக்‌ஷய் குமார் நடிப்பில் 'ராம் சேது' - இந்தியாவில் படத் தயாரிப்பைத் தொடங்கும் அமேசான் ப்ரைம்

By பிடிஐ

அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் நேரடித் திரைப்படத் தயாரிப்பைத் தொடங்குகிறது. அக்‌ஷய் குமார் நடிக்கும் ’ராம் சேது’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக அமேசான் செயல்படவுள்ளது.

’பர்மானு’, ’தேரே பின் லேடன்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமாரின் ’கேப் ஆஃப் குட்’ ஃபிலிம்ஸ், அபண்டன்ஷியா எண்டர்டெய்ன்மெண்ட், லைகா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸ், நுஷ்ரத் பரூச்சா ஆகியோரும் படத்தில் நடிக்கவுள்ளனர்.

"இந்திய வேரில் ஊறிய கதைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களைச் சென்று சேர்ந்துள்ளன. நமது இந்தியப் பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு திரைப்படத்தை இணைந்து தயாரிப்பதன் மூலம் தயாரிப்பில் அடியெடுத்து வைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி" என்று அமேசான் ப்ரைம் வீடியோவின் தலைவர் மற்றும் இயக்குநர் விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு நமது இந்தியப் பாரம்பரியத்தைப் பற்றிய கதையை எடுத்துச் செல்வதைத் தான் ஆர்வத்துடன் எதிர்நோக்குவதாக அக்‌ஷய் குமார் கூறியுள்ளார். திரையரங்க வெளியீடாக திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படம் சில மாதங்கள் கழித்து அமேசான் ப்ரைம் தளத்திலும் வெளியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்