'டிரைவிங் லைசன்ஸ்' தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
லால் ஜூனியர் இயக்கத்தில் ப்ரித்விராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாளப் படம் 'டிரைவிங் லைசன்ஸ்'. நடிகருக்கும், அவரது ரசிகருக்கும் இடையே நிகழும் கதையே இந்தப் படம். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து இதர மொழிகளின் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதில் தெலுங்கு ரீமேக் உரிமையை ராம்சரண் கைப்பற்றினார். ராம்சரண் என்றவுடனே சிரஞ்சீவி நடிப்பார் எனப் பலரும் கருதினார்கள்.
ஆனால், இந்தப் படத்தில் ரவிதேஜா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதில் ரவி தேஜா நடிகராகவும், விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது. நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியானாலும், இயக்குநர் குறித்த எந்தவொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது 'கில்லாடி' என்னும் படத்தில் நடித்து வருகிறார் ரவி தேஜா. அதனைத் தொடர்ந்து த்ரிநாதா ராவ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். அதற்குப் பிறகே 'டிரைவிங் லைசன்ஸ்' தெலுங்கு ரீமேக்கில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.
இதுவரை ராம் சரண் தயாரித்துள்ள படங்கள் அனைத்திலுமே சிரஞ்சீவிதான் நாயகனாக நடித்துள்ளார். முதல் முறையாக வெளி நடிகர்களை வைத்து ராம் சரண் படம் தயாரிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago