சினிமா மீதான பாலகிருஷ்ணாவின் காதல் ஈடு இணையற்றது என்று நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
பாலகிருஷ்ணா நடித்து வரும் அடுத்த படத்தைப் போயபடி சீனு இயக்கி வருகிறார். போயபடி சீனு - பாலகிருஷ்ணா மூன்றாவது முறையாக இணையும் இப்படம் ‘பிபி3’ என்று அழைக்கப்படுகிறது. கரோனா அச்சுறுத்தலால் ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துப் படக்குழு திரும்பியது.
இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. முதலில் 'பிசாசு' படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா ஒப்பந்தமானார். ஆனால், தேதிகள் பிரச்சினைகள் காரணமாக படத்திலிருந்து அவர் விலகவே, சயிஷா சைகல் ஒப்பந்தமானார். இதனை போயபடி சீனு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
ஆனால், ஒருசில காரணங்களால் சயிஷா சைகலும் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பிரக்யா ஜெய்ஷ்வால் ஒப்பந்தமானார். இன்னொரு நாயகியாக பூர்ணா நடித்து வருகிறார்.
» 'அண்ணாத்த' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு ஒப்பந்தம்
» கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் 'அண்ணாத்த' படப்பிடிப்பு
இந்நிலையில் இப்பட அனுபவம் குறித்து பிரக்யா ஜெய்ஷ்வால் கூறியுள்ளதாவது:
''பாலகிருஷ்ணாவுடன் நடிப்பது ஒரு அற்புதமான அனுபவம். காரணம் அவருடன் இருப்பது படப்பிடிப்புத் தளத்துக்கு அதிகமான நேர்மறை அதிர்வுகளையும், சக்தியையும் கொடுக்கும். சினிமா மீதான அவரது காதல் ஈடு இணையற்றது.
நான் இதற்கு முன்பு இயக்குநர் போயபடி சீனுவுடன் பணிபுரிந்துள்ளேன். எனவே ‘பிபி3’ படத்தில் பணிபுரிவது எனக்கு இலகுவானதாக இருக்கிறது. அவரது தொலைநோக்குப் பார்வையும், தெளிவும் ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கின்றன. ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் அவர்தான் உந்து சக்தி''.
இவ்வாறு பிரக்யா ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago