மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதால், கன்னடத்திலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது.
ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பிரபலமானது 'குக் வித் கோமாளி'. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் கோமாளிகளாக வரும் புகழ், சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்ட பலர் மிகவும் பிரபலமாகியுள்ளனர்.
அருண் விஜய் நடித்து வரும் படம், சந்தானம் நடித்து வரும் படம் உள்ளிட்ட பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் புகழ். மேலும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி. மேலும், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகள் அனைவருமே தனியாக யூ-டியூப் சேனல் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவுமே லட்சக்கணக்கில் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஒரு நிகழ்ச்சி பிரபலமாகிவிட்டால் உடனடியாக இதர மொழிகள் அதே நிகழ்ச்சி தொடங்கப்படும். அந்த வரிசையில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி கன்னடத்திலும் தொடங்கப்படவுள்ளது. இதற்கான விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி ஸ்டார் ஸ்வர்ணா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
முதலில் கன்னடத்தில் தொடங்கப்படவுள்ள இந்த நிகழ்ச்சி, விரைவில் இதர மொழிகளிலும் தொடங்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்றே தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago