சல்மான் கானின் 'ராதே' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'தபங் 3' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ராதே’. இப்படத்தில் திஷா படானி, ரன்தீப் ஹூடா, பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 'வெடரன்' என்கிற தென்கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஓடிடியில் வெளியிடுவதற்காகப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.

இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சல்மான் கான் இந்தத் தகவலை மறுத்து திரையரங்கில் தான் 'ராதே' வெளியாகும் என்று தெரிவித்தார். பலமுறை வெளியீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இறுதியாக, ரம்ஜான் விடுமுறையைக் கணக்கில் கொண்டு மே 13-ம் தேதி 'ராதே' வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் வெளியீடு குறித்த வதந்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்