க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வரும் படத்துக்கு 'ஹரி ஹர வீரமல்லு' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கியவுடன், 'பிங்க்' ரீமேக் மற்றும் க்ரிஷ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தார் பவன் கல்யாண். இதில் 'பிங்க்' ரீமேக்கான 'வக்கீல் சாப்' பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் பவன் கல்யாண். அந்தப் படமும் ஏப்ரல் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
ஆனால், க்ரிஷ் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் படமானது வரலாற்றுப் படமாகும். பெரும் பொருட்செலவில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கி வந்தது படக்குழு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 40% தான் முடிவுற்றுள்ளது. ஜூலைக்குள் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்கப் படக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தப் படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். 17-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பவன் கல்யாணுடன் நடித்து வரும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை. இசையமைப்பாளராக கீராவானி, ஒளிப்பதிவாளராக வி.எஸ்.ஞான சேகர், கலை இயக்குநராக ராஜீவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் கிராபிக்ஸ் பணிகளை பென் லாக் கவனித்து வருகிறார். இவர் பல்வேறு ஹாலிவுட் படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் படத்துக்கு 'ஹரி ஹர வீரமல்லு' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளது.
'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் சிறு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை பவன் கல்யாண் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago