'சீயான் 60' படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அனிருத்துக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதன் படப்பிடிப்பு இன்று (மார்ச் 10) முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. லலித் குமார் தயாரித்து வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சீயான் 60' என அழைத்து வருகிறார்கள். இதில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், விக்ரமுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிவார் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிவார் என்று படக்குழு அறிவித்துள்ளது. பல்வேறு படங்களில் அனிருத் பணிபுரிவதால் இந்தப் படத்துக்கு இசையமைக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
» ‘அந்தாதூன்’ மலையாள ரீமேக்கில் இருந்த அஹானா நீக்கம்; அரசியல் காரணமா? - படக்குழுவினர் விளக்கம்
» டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகும் உலகம் சுற்றும் வாலிபன்
'சீயான் 60' படத்தை ஒரே கட்டமாக முடித்து, செப்டம்பரில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago