'சீயான் 60' படத்தில் மீண்டும் விக்ரம் - சிம்ரன் ஜோடி இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது.
'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' ஆகிய படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சீயான் 60' என அழைத்து வருகிறார்கள். 'கோப்ரா' தயாரிப்பாளர் லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இதில் உள்ள நாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளார். இன்னொரு நாயகிக்குப் பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இறுதியில், சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பில் உள்ளது. அதற்கு முன்னதாக 'பிதாமகன்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சூர்யா - விக்ரமுடன் நடனமாடியிருந்தார் சிம்ரன். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு விக்ரம் - சிம்ரன் இணைந்து நடிக்கும் படமாக 'சீயான் 60' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ஒரே கட்டமாகப் படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் நடிகர்களிடம் கால்ஷீட் தேதிகள் வாங்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago