'நவரசா' அப்டேட்: வஸந்த் பகுதியின் நடிகர்கள் பட்டியல்

By செய்திப்பிரிவு

'நவரசா' ஆந்தாலஜியில் வஸந்த் இயக்கவுள்ள பகுதியில் நடிக்கவுள்ளவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் திரையுலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி வருகிறது. இதில் அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்து வருகிறார்கள். மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா தயாரித்து வரும் இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டது. இதில் சில இயக்குநர்கள் விலகவே, சிலர் இணைந்துள்ளார்கள். ஹலிதா ஷமீம், பொன்ராம் ஆகியோருக்கு பதிலாக ப்ரியதர்ஷன், வஸந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இதில் பல இயக்குநர்கள் தங்களுடைய படங்களின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள். வஸந்த் இயக்கவுள்ள பகுதியின் படப்பிடிப்பு விரைவில் கும்பகோணத்தில் தொடங்கவுள்ளது.

தற்போது படப்பிடிப்புக்கான இடங்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு சிறுகதையை மையப்படுத்தி வஸந்த் உருவாக்கியுள்ள கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் அதிதி பாலன், ரோகிணி, டெல்லி கணேஷ், பக்ஸ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகியுள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவுற்றவுடன் தான் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE