ரன்பீர் கபூருக்குக் கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கி ஏறக்குறைய ஓராண்டு ஆன நிலையில் நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து, இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது. புதிதாக 15,388 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,44,786 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை ரன்பீரின் அம்மா நீது கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''உங்கள் அனைவரது அக்கறைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. ரன்பீர் கபூருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல் நலம் முன்னேறி வருகிறது. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்''.

இவ்வாறு நீது கபூர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்