விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் 'மோகன்தாஸ்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.
மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஷ்ணு விஷால். இதில் நாயகனாக நடித்திருப்பது மட்டுமன்றி, தயாரித்தும் வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் தயாரித்து, நடிக்கவுள்ள படம் 'மோகன்தாஸ்'. கரோனா ஊரடங்கு சமயத்திலேயே இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
தற்போது சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பை 'மோகன்தாஸ்' படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். இந்தப் படத்தை 'களவு' படத்தை இயக்கியிருந்த முரளி கார்த்திக் இயக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு எமோஷனல் த்ரில்லர் பாணியிலான கதையாகும்.
இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன்,அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக சுந்தரமூர்த்தி கே.எஸ்., எடிட்டராக கிருபாகரன், கலை இயக்குநராக அருண்சங்கர் துரை ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago