'வி' திரைப்படத்தை நீக்கச் சொல்லி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வி திரைப்படத்தில் சாக்ஷி மாலிக் என்கிற நடிகையின் புகைப்படம் அனுமதியின்றி இடம்பெற்றுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, நானி, அதிதி ராவ் ஹைதரி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான தெலுங்கு திரைப்படம் 'வி'. பாலிவுட் நடிகை சாக்ஷி மாலிக் என்பவர் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஒரு ஃபோட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறார். இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.
சாக்ஷி மாலிக்கிடம் உரிய அனுமதி பெறாமல், அவரது புகைப்படத்தை வி திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். மேலும், திரைப்படத்தில், பாலியல் தொழிலாளியைப் பற்றிய வசனமும் இந்தப் புகைப்படம் தோன்றும் போது பேசப்பட்டுள்ளது.
இது தன்னுடைய அந்தரங்க விதிமீறல் என்றும், ஒருவரது தனிப்பட்ட உடமையை முறையான அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், ரூ.30 கோடி நஷ்ட ஈடு கேட்டு, மான நஷ்ட வழக்கொன்றை சாக்ஷி தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் சாக்ஷி தரப்பில் நியாயம் இருப்பதாகவே நினைப்பதாகக் கூறியுள்ளது. மேலும் வி திரைப்படத்தில் சாக்ஷியின் புகைப்படம் நீக்கப்படும் வரும், அதன் எல்லா வகையான வடிவங்களும், பதிப்புகளும், அதன் சப்டைட்டில்களும் நீக்கப்பட வேண்டும் என்று அமேசான் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை வெறுமனே மழுங்கடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது.
புகைப்படம் நீக்கப்படும் வரை, படத்தை ஓடிடி மட்டுமல்லாது எந்த ஒரு தளத்திலும், ஊடகத்திலும் வெளியிடக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றும், தனக்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் சாக்ஷி மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago