சாம் ஆண்டன் இயக்கவுள்ள படத்தில் அதர்வாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன் நடிக்கவுள்ளார்.
2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான படம் '100'. சாம் ஆண்டன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் அதர்வா - சாம் ஆண்டனி கூட்டணி இணைந்துள்ளது.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இதில் அதர்வாவுக்கு அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பாண்டியன் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஹைதராபாத்திலேயே மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளனர். சென்னையில் பாடல்களை மட்டும் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago