மோகன்லால் இயக்கவுள்ள 'பரோஸ்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன் நடிக்கவுள்ளார்.
இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வரும் மோகன்லால், இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.
'மை டியர் குட்டிச்சாத்தான்' இயக்குநர் ஜிஜோ ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ என்னும் போர்ச்சுகீசியர்கள் குறித்த கதையைத்தான் மோகன்லால் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகளை நீண்ட மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார்.
கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தொடங்கத் தாமதமானது. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார் மோகன்லால். இந்தக் கதையில் ஸ்பானீஷ் நடிகர்களுடன் இணைந்து, பரோஸ் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
» முடிவுக்கு வந்தது 'மாமனிதன்' சர்ச்சை: சீனு ராமசாமி தகவல்
» மறைந்த சாட்விக் போஸ்மேனுக்கு கோல்டன் குளோப் விருது: ரூஸோ சகோதரர்கள் நெகிழ்ச்சி
முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். பல வருடங்களுக்குப் பின் மோகன்லால் - சந்தோஷ் சிவன் இணைந்து பணிபுரியவுள்ளனர். லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago