‘அக்வாமேன்’ படங்களில் இருந்து நடிகை ஆம்பர் ஹேர்ட் நீக்கப்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தனது மனைவியான ஆம்பர் ஹேர்டை அடித்துத் துன்புறுத்தியதாக லண்டனில் வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக ஜானி டெப் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தது. இதனால் ஜானி டெப் தான் நடித்து வந்த ‘பென்டாஸ்டிக் பீஸ்ட்’ படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜானி டெப்பின் மனைவியான ஆம்பர் ஹேர்டும் ‘அக்வாமேன் 2’ படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது. ஜானி டெப் ரசிகர்கள் பலரும் இதைக் குறிப்பிட்டு ஜானி டெப்புக்கு நீதி கிடைத்தது என்று பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் ‘அக்வாமேன்’ படங்களில் இருந்து ஆம்பர் ஹேர்ட் நீக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை ஆங்கில ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால், ஆம்பர் ஹேர்ட் தரப்பிலிருந்தோ, அக்வாமேன் படக்குழுவினர் தரப்பிலிருந்தோ இதுபற்றிய எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘அக்வாமேன் 2’ படத்தில் ஜாசன் மோமா, ஆம்பர் ஹேர்ட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட இப்படம் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago