நார்மேன் லியருக்கு ‘கரோல் பர்னெட்’ விருது: கோல்டன் குளோப் விழாவில் கவுரவம்

By ஏஎன்ஐ

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், கதாசிரியருமான நார்மேன் லியருக்கு 'கரோல் பர்னெட்' விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் ஃபாரின் ப்ரஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் என்று அழைக்கப்படுகிறது. கோல்டன் குளோப் விருது என்பது மிகவும் பிரபலமானது.

78-வது கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று தொடங்கியது. வழக்கமாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறும் இவ்விழா கரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாகத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், கதாசிரியருமான நார்மேன் லியருக்கு தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் 'கரோல் பர்னெட்' விருது வழங்கப்பட்டுள்ளது.

1970களில் அமெரிக்காவில் பிரபலமான ‘ஆல் இன் தி ஃபேமிலி’,‘சான்ஃபோர்ட் அண்ட் சன்’, ‘ஒம் டே ஐ எ டைம்’ மற்றும் 2017ஆம் ஆண்டு வெளியான ‘தி ஜெஃபர்சன்ஸ், தி குட் டைம்ஸ்’ உள்ளிட்ட தொடர்களை நார்மேன் உருவாக்கியுள்ளார். இது தவிர அரசியல் செயல்பட்டாளராகவும் நார்மேன் இருந்து வருகிறார்.

2019ஆம் ஆண்டு தனது 97-வது வயதில் எம்மி விருதை வென்றத நார்மேன், எம்மி விருதை வென்ற அதிக வயதான நபர் என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE