கோல்டன் குளோப் 2021 விருது வழங்கும் விழாவில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தின் தயாரிப்புகள் ஆதிக்கம் செலுத்தின. மொத்தம் 6 விருதுகளை பல்வேறு பிரிவுகளில் நெட்ஃபிளிக்ஸ் படைப்புகள் வென்றன.
ஹாலிவுட் ஃபாரின் ப்ரெஸ் அசோசியேஷன் என்கிற அமைப்பு சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறந்த படைப்புகளையும், கலைஞர்களையும் ஆண்டுதோறும் கவுரவித்து வருகிறது. இதுவே கோல்டன் குளோப் என்றழைக்கப்படுகிறது. ஆஸ்கருக்கு இணையாகப் போற்றப்படும் இந்த விருது வழங்கும் விழாவின் 78-வது பதிப்பு கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் நடந்தது. இணையம் மூலமாக இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு தொகுப்பாளர்கள் வழங்க, இணையம் மூலமாகவே நேரலையில் விருதுகள் அறிவிக்கப்பட்டு அந்தந்தக் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இதில் மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு டிராமா திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.
திரைப்பட விருதுகள்
» சிறந்த பன்முக நடிகர் அஜித், சிறந்த நடிகர் தனுஷ்: தாதாசாஹேப் பால்கே விருதுகள் அறிவிப்பு
» உலக மேடையில் இந்தியத் திறமையாளர்கள் பெருமையோடு நிற்கலாம்: பாஃப்தா முயற்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்
சிறந்த திரைப்படம் - டிராமா
நோமேட்லேண்ட்
சிறந்த திரைப்படம் - மியூஸிக்கல் / காமெடி
போரட் சப்ஸிக்யூண்ட் மூவி ஃபிலிம்
சிறந்த நடிகை - டிராமா
ஆண்ட்ரா டே (தி யுனைடட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லீ ஹாலிடே)
சிறந்த நடிகர் - டிராமா
சாட்விக் போஸ்மேன் (மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்)
சிறந்த நடிகர் - மியூஸிக்கல் / காமெடி
ஸச்சா பேரன் ஜோஹன் (போரட் சப்ஸிக்யூண்ட் மூவி ஃபிலிம்)
சிறந்த நடிகை
ஜோடி ஃபாஸ்டர் (தி மாரிஷேனியன்)
சிறந்த நடிகை - மியூஸிக்கல் / காமெடி
ரோஸமுண்ட் பைக் (ஐ கேர் எ லாட்)
சிறந்த உறுதுணை நடிகர்
டேனியல் கலூயா (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸையா)
சிறந்த இயக்குநர்
க்ளோ ஸாவோ (நோமேட்லேண்ட்)
சிறந்த இசைக் கோர்ப்பு
ட்ரெண்ட் ரெஸ்னர், ஆட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்ட் - ஸோல்
சிறந்த பாடல்
தி லைஃப் அஹெட் திரைப்படத்திலிருந்து ‘லோ ஸீ’
சிறந்த திரைக்கதை
ஆரன் சார்கின் (தி ட்ரயல் ஆஃப் தி சிகாகோ 7)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
ஸோல்
சிறந்த அயல் மொழித் திரைப்படம்
மினாரி
தொலைக்காட்சி விருதுகள்
சிறந்த தொலைக்காட்சித் தொடர் - டிராமா
தி க்ரவுன்
தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட சிறந்த குறுந்தொடர் / திரைப்படம்
தி குயின்ஸ் கேம்பிட்
சிறந்த நடிகை - தொலைக்காட்சிக் குறுந்தொடர் / திரைப்படம்
ஆன்யா டெய்லர் ஜாய் (தி குயின்ஸ் கேம்பிட்)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் - மியூஸிக்கல் / காமெடி
ஷிட்ஸ் க்ரீக்
சிறந்த நடிகர் - தொலைக்காட்சித் தொடர், டிராமா
ஜாஷ் ஓ கானர் (தி க்ரவுன்)
சிறந்த நடிகர் - தொலைக்காட்சித் தொடர், மியூஸிக்கல் / காமெடி
ஜேஸன் சூடெகிஸ் (டெட் லாஸோ)
சிறந்த நடிகை - தொலைக்காட்சித் தொடர், டிராமா
எம்மா காரின் (தி கிரவுன்)
சிறந்த நடிகர் - தொலைக்காட்சிக் குறுந்தொடர்/ திரைப்படம்
மார்க் ரஃபல்லோ (ஐ நோ திஸ் மச் இஸ் ட்ரூ)
சிறந்த நடிகை - தொலைக்காட்சித் தொடர், மியூஸிக்கல் / காமெடி
கேத்தரின் ஓ ஹாரா (ஷிட்ஸ் க்ரீக்)
சிறந்த உறுதுணை நடிகை - தொலைக்காட்சித் தொடர் / குறுந்தொடர் / திரைப்படம்
கில்லியன் ஆண்டர்சன் (தி க்ரவுன்)
சிறந்த உறுதுணை நடிகர் - தொலைக்காட்சித் தொடர் / குறுந்தொடர் / திரைப்படம்
ஜான் போயேகா (ஸ்மால் ஆக்ஸ்)
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago