அல்லு அர்ஜுன் பட வாய்ப்பை மறுத்தேனா?- ப்ரியா வாரியர் விளக்கம்

By செய்திப்பிரிவு

அல்லு அர்ஜுன் பட வாய்ப்பை மறுத்துவிட்டதாக வெளியான தகவலுக்கு ப்ரியா வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ப்ரியா வாரியர். தற்போது தெலுங்கில் நிதின் நடிப்பில் வெளியாகியுள்ள 'செக்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் படமொன்றில் நடிக்க ப்ரியா வாரியர் மறுத்துவிட்டார் என்ற தகவல் வைரலானது. இது தொடர்பாக 'செக்' படத்தை விளம்பரப்படுத்த வந்த ப்ரியா வாரியரிடம் கேட்ட போது அவர் கூறியிருப்பதாவது:

"நான் அல்லு அர்ஜுனின் மலையாள மொழிமாற்றம் திரைப்படங்களை என் சிறுவயதிலிருந்து பார்த்து வருகிறேன் எனக்கு அவர் மீது விசேஷமான ஒரு ஈர்ப்பு உள்ளது.

அல்லு அர்ஜுனுடன் நடிக்க எனக்கு ஒரு திரைப்பட வாய்ப்பு வந்ததாகவும் நான் அதை மறுத்து விட்டதாகவும் சில புரளிகள் வந்துள்ளன அதில் எந்த உண்மையும் இல்லை எனக்கு அவருடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தால் அதை நான் உடனடியாக ஏற்றுக் கொள்வேன்"

இவ்வாறு ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்