'பிசாசு 2' படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பிசாசு 2'. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏலகிரியில் சில காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதற்காக திண்டுக்கல்லுக்குச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.
'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் விஜய் சேதுபதி, பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தொடங்குவார் எனத் தெரிகிறது. தற்போது அந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago