‘த்ரிஷ்யம் 2’ படத்தைப் பாராட்டிய அஸ்வின்

By செய்திப்பிரிவு

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம் 2’ படத்தை கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் வெளியான படம் 'த்ரிஷ்யம் 2'.

முதல் பாகத்தின் முடிவிலிருந்து, 2-ம் பாகத்தைத் தொடங்கியிருந்தார் இயக்குநர் ஜீத்து ஜோசப். 'த்ரிஷ்யம் 2' படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளத்தில் பலரும் படத்தின் கதை, திரைக்கதை குறித்துச் சிலிர்ப்புடன் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘த்ரிஷ்யம் 2’ படத்தைப் பாராட்டியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் ஜார்ஜ்குட்டி மோகன்லால் நீதிமன்றத்தில் அந்த ட்விஸ்ட்டை உருவாக்கும் காட்சியில் வாய்விட்டுச் சிரித்தேன். அப்படி இல்லையென்றால் மீண்டும் ‘த்ரிஷ்யம் 1’ படத்திலிருந்து ஆரம்பியுங்கள். அற்புதமான படம்''.

இவ்வாறு அஸ்வின் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் கேட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு அஸ்வின் பேசிய காணொலி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்