'உப்பெனா' தமிழ் ரீமேக்கில் விஜய் மகன் சஞ்சய் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ள தெலுங்குப் படம் 'உப்பெனா'. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 12-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். முதல் வாரத்திலேயே உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்து ஆச்சரியம் அளித்தது. புதுமுக நடிகரின் படம் இந்தளவுக்கு வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறை என்று தெலுங்கு திரையுலகின் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றியால், இதர மொழிகளில் 'உப்பெனா' படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவிவருகிறது. தமிழில் 'உப்பெனா' ரீமேக்கின் மூலம் விஜய்யின் மகன் சஞ்சய் நாயகனாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் வைரலாக பரவி வருகிறது.
» இரண்டாவது ஆண் குழந்தைக்குத் தாயான கரீனா கபூர்
» கலைமாமணி விருது: தாயின் காலில் விழுந்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
இது தொடர்பாக விசாரித்த போது, "இயக்குநர் ஆவதற்காகத் தான் சஞ்சய் படித்து வருகிறார். ஆகையால், அவர் நாயகனாக உருவாதற்கு வாய்ப்புகள் குறைவு. 'உப்பெனா' தமிழ் ரீமேக்கில் எப்படி விஜய்யின் மகன் பெயர் வந்தது என்றே தெரியவில்லை. இது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்கள்.
முன்னதாக, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே இதே 'உப்பெனா' தமிழ் ரீமேக்கில் விஜய் மகன் சஞ்சய் என்ற வதந்தி வெளியானது. அப்போதும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago