முகேனின் புதிய படம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் படத்துக்கு 'வேலன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் முகேன் ராவ். 'வெப்பம்' இயக்குநர் அஞ்சனா இயக்கத்தில் உருவாகும் 'வெற்றி' படத்தின் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். அதனைத் தொடர்ந்து முகேன் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கவின் இயக்கி வருகிறார்.

காதல், காமெடி எனப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு 'வேலன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இதில் மீனாக்‌ஷி, பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பெரடி உள்ளிட்ட பலர் முகேனுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக கோபி ஜெகதீஸ்வரன், இசையமைப்பாளராக கோபி சுந்தர், கலை இயக்குநராக பாலசுப்பிரமணியம், எடிட்டராக சரத்குமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் பற்றி அறிவிப்பு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்