'மோகன் தாஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திரஜித் சுகுமாரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஷ்ணு விஷால் நடித்துள்ள 'காடன்' மற்றும் 'ஜகஜால கில்லாடி' படங்களின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதனைத் தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக 'மோகன் தாஸ்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரிக்கவுள்ளார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தை 'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இதில் விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். அவரைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திரஜித் சுகுமாரனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. 'நரகாசூரன்' படத்தைத் தொடர்ந்து, இந்திரஜித் சுகுமாரன் ஒப்பந்தமாகியுள்ள அடுத்த தமிழ்ப் படமாக 'மோகன் தாஸ்' அமைந்துள்ளது.
» 'அத்ரங்கி ரே' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
» 'தளபதி 65' அப்டேட்: ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம்
இதன் படப்பிடிப்பை விரைவில் துவங்குவதற்கு, படக்குழுவினர் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago