'அத்ரங்கி ரே' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் 'அத்ரங்கி ரே' வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ர உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. தற்போது இந்தப் படம் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் இணைந்து நடித்துள்ளதால், இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், 'ஷமிதாப்' படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நேரடி இந்திப் படம் 'அத்ரங்கி ரே' என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE