'தளபதி 65' படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்துக்கான விஜய் லுக்கை இறுதி செய்வதற்கான போட்டோ ஷூட் நடைபெற்றது.
அதிலிருந்து ஒரு லுக்கை முடிவு செய்துவிட்டது படக்குழு. விரைவில் இதர நடிகர்கள் ஒப்பந்தமானவுடன் போட்டோ ஷூட் நடைபெறவுள்ளது. தற்போது இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷங்கர் - விஜய் இணைப்பில் வெளியான 'நண்பன்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் மனோஜ் பரமஹம்சா என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார் மனோஜ் பரமஹம்சா. அதனைத் தொடர்ந்து 'தளபதி 65' படத்தில் பணிபுரியவுள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்கி, 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு 'தளபதி 65' படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago