'அந்தாதூன்' தெலுங்கு ரீமேக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'அந்தாதூன்' படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது.

இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. ஜூன் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'அந்தாதூன்' ரீமேக்குகளில் முதலாவதாக வெளியாகும் படமாக தெலுங்கு ரீமேக் அமைந்துள்ளது. இன்னும் இந்தப் படத்துக்குப் பெயர் வைக்கவில்லை. இசையமைப்பாளராக மஹதி ஸ்வர சாகர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஹரி கே வேதாந்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நாயகனாக நடிக்க 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE