பெரும் எதிர்பார்ப்புக்குரிய '83' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்ற கதை '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. கபீர்கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
தீபிகா படுகோன், கபீர் கான், விஷ்ணுவர்தன் இந்தூரி, சஜீத் நாடியாவாலா, ஃபாண்டம் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் 83 பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.
கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். இதற்காக கபில் தேவ் நேரடியாகவே ரன்வீர் சிங்கிற்கு பயிற்சி அளித்துள்ளார். படத்தில் கபில் தேவ்வின் மனைவியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், ஜீவா, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இந்திய அணியின் வீரர்களாக நடித்துள்ளனர். அவர்களுக்கு யஷ்பால் சர்மா, பல்விந்தர் சாது உள்ளிட்ட இந்திய வீரர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.
இந்தப் படம் முழுமையாகத் தயாரான போது, கரோனா அச்சுறுத்தல் உருவானதால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் திரையரங்கில் தான் வெளியீடு என்பதில் உறுதியாக இருந்தது.
தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு 100% இருக்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து '83' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், '83' படம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே உற்சாகமாகியுள்ளனர்.
இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் '83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் பி.வி.ஆர். நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago