குறுகிய காலத்தில் தான் 20 கிலோ எடை குறைத்ததன் பின்னணி குறித்து நடிகை கீர்த்தி சுரேஷின் சகோதரி ரேவதி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது சகோதரி ரேவதி சுரேஷ். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் ரேவதியின் உடல் எடை குறித்து நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷுடன் ஒப்பிட்டுக் கிண்டலடித்து வருவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ளார் ரேவதி. இது சமூக வலைதளங்களில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பலரும் உடல் எடையைக் குறைத்த ரகசியம் குறித்துக் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுகுறித்து ரேவதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''என் வாழ்நாள் முழுவதும் உடல் எடையைச் சரிசெய்ய மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளேன். என் தாய் மற்றும் சகோதரியுடனான தொடர் ஒப்பீடுகள் மூலம் தொடர்ந்து கேலி செய்யப்பட்டேன். இதனால் என்னிடம் ஏதோ தவறாக இருப்பதாகவும், நான் சராசரியானவள் இல்லை எனவும் எனக்கு எப்போதும் தோன்றிக்கொண்டே இருந்தது. மக்கள் அவ்வாறு என்னை நம்ப வைத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் என் கணவர் என்னிடம் அவரது காதலை தெரிவித்தபோது கூட என்னிடம் அப்படி எதைக் கண்டார் என்று எனக்குத் தோன்றியது. இலவச அறிவுரை கொடுப்பதிலும், கிண்டல் செய்வதிலும், கருத்து சொல்வதிலும் மக்களுக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை.
நான் முதல் முறையாகச் சந்திக்கும் அந்நியர்கள் கூட எடை குறைப்பது எப்படி என்பது குறித்து எனக்கு வகுப்பெடுத்தார்கள். ஒரு கட்டத்தில் என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன். வேலையும் பொறுப்பும் என்னை எப்போதும் பிஸியாக வைத்திருந்தாலும்கூட நான் எப்போதும் என்னை அழகானவளாக உணரமுடியவில்லை. ஆனால், என் தங்கை எப்போதுமே என்னை இதுபோன்ற மிருகங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தே வந்திருக்கிறார். ஒருமுறை என்னிடம் தனது நண்பர்கள் தன்னை விட நான்தான் அழகாக இருப்பதாகக் கூறியதாக என்னிடம் தெரிவித்தார். என் கணவரும், என் அம்மாவும்கூட அதையேதான் சொல்வார்கள்.
எனது யோகா ஆசிரியை தாரா சுதர்ஷன் என்னைச் சுற்றி நான் போட்டு வைத்திருந்த வட்டத்திலிருந்து என்னை வெளியே இழுத்து வரும்வரை, நான் சமூகம் என்னை நோக்கி வீசிய கருத்துகளுக்கு நான் மதிப்பு கொடுத்துவந்தேன். நானே என் மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட சமயத்தில் அவர் என்னை நம்பினார். எனக்குள் இருந்த வலிமையை அவர் எனக்குக் காட்டினார். நான் உள்ளேயும் வெளியேயும் அழகானவள் என்பதையும், அதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்பதையும் அவர் எனக்கு உணர்த்தினார். என்னுடைய முதல் மைல்கல்லான 20 கிலோ எடைக்குறைப்பை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்''.
இவ்வாறு ரேவதி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago